செங்கோட்டையன் அந்த கால அதிமுககாரர். மிகவும் விசுவாசமானவர் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "எந்த நிலையிலும் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர் செங்கோட்டையன். அவர் மீது எந்த அதிருப்தியும் எங்களுக்கு இல்லை. மற்றபடி எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கிறாரா என்பதற்கு செங்கோட்டையன்தான் பதில் சொல்ல வேண்டும்" என்று பேட்டியளித்துள்ளார்.