முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி பயணம் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை கிளப்பியுள்ள நிலையில் அதன் பின்னணியில் சில விஷயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அமித் ஷா - இபிஎஸ் சந்திப்பில் கூட்டணி உடன்பாடு ஏற்படாததால் செங்கோட்டையனை வைத்து பாஜக காய் நகர்த்துகிறது. அதிமுக ஒன்றுபட்ட கட்சியாக திரளவும் செங்கோட்டையனை கட்சியின் பொதுச் செயலாளர் நாற்காலியில் அமர வைக்கவும் ரகசிய திட்டம் போடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.