முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் - ஆர்த்தி தம்பதி தங்களின் 21 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒருவருக்கொருவர் Unfollow செய்துள்ளனர். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.