நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இலங்கையில் பிரபாகரனை சந்தித்த சமயத்தில் அவருடன் சென்ற 'எல்லாளன்' திரைப்பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கூறுகையில், "சீமான் சொல்லும் ஆமைக்கறி உட்பட அனைத்தையும் அங்கு நான் சாப்பிட்டு இருக்கிறேன். ஆனால், அது சீமானுக்கு பரிமாறப்படவில்லை, அவருக்கு உடும்புக்கறி கொடுக்கப்பட்டது, சீமான் மற்றவர்களுக்கு நடந்ததை தனக்கு நடந்ததாக காட்டிக்கொள்கிறார்" என்றார்.