ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலோசனை நடத்தியுள்ளார். 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2023 இடைத்தேர்தலில் நாதக சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை ஆண் வேட்பாளர் நிறுத்தப்படவுள்ளார். 3 பேரை சீமான் நேர்காணல் செய்துள்ள நிலையில், எம்பிஏ பட்டதாரி ஒருவரை தேர்வு செய்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.