பெரியார் குறித்து பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி எச்சரித்துள்ளார். அவர் கூறியதாவது, "சீமான் உனக்கு அவ்ளோதான் Time. நீ யார வேணா பேசு, என்ன வேணா பேசு ஆனால் தந்தை பெரியாரை தொடாதே. நீ கெட்டு போய் விடுவாய், இது போன்ற கேவலமான செயலை விட்டுவிட வேண்டும். தந்தை பெரியாரை போன்ற தலைவர் இனி இந்த உலகத்தில் கிடைக்க மாட்டார்” என்றார். தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி பேசியதாக சீமான் மீது பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.