சென்னை: கேப்டன் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்தில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் ஏதாவது நல்லது செய்யவேண்டும் என கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகளை எதிர்த்து கட்சியை தொடங்கியவர் கேப்டன் விஜயகாந்த். இன்னும் 10 ஆண்டுகள் அவர் உயிரோடு இருந்திருந்தால் தமிழகத்தில் பெரிய ஆற்றலாகவும், மாற்று அரசியலையும் உருவாக்கியிருப்பார். தமிழக மக்கள் அதை இழந்துவிட்டனர்” என்றார்.