திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு சம்பந்தமாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் பிப்., 19ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. டிஐஜி வருண்குமார், சீமான் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் புகார்தாரர் தரப்பிலான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் கோர்ட் எண் நான்கு மாஜிஸ்திரேட் பாலாஜி வரும் பிப்.,19ஆம் தேதி சீமானே நேரில் ஆஜராக வேண்டும் அவர் சார்பில் வக்கீல் ஆஜராக கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.