தந்தை பெரியார் குறித்து சீமான் பேசியது பெரும் சர்ச்சையானது. அவரது கருத்துக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். எல்லை மீறி, மனம்போன போக்கில் பெரியாரை சீமான் கொச்சைப்படுத்தி உள்ளார். சீமானை நீதிமன்றக் கூண்டில் ஏற்றி உரிய தண்டனையை உடனே வழங்க வேண்டும்” என்றார்.