நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டத் தலைவர் கண்ணன் கட்சியில் இருந்து விலகியுள்ளார். கட்சி கட்டமைப்பு என்று சீமான் எடுத்து வருகின்ற முடிவு களத்தில் உண்மையாக உழைத்தவர்களை உதாசீனப்படுத்துவதாக உள்ளது என கண்ணன் கூறியுள்ளார். மேலும், தமிழ் தேசிய பாதையில் எனது பயணம் தொடரும் என்னுடன் உழைத்த நாம் தமிழர் கட்சியினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.