திருச்சி டிஐஜி வருண்குமார், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் எண்-4ல் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணைக்காக சீமான் ஆஜராகாத நிலையில் இதுதான் கடைசி வாய்ப்பு என கூறிய நீதிமன்றம் மே 21ஆம் தேதி அவர் நிச்சயம் ஆஜராக வேண்டும் என எச்சரித்தது. ஆனால் நீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி சீமான் இன்று ஆஜராகவில்லை. வருண்குமாரும் ஆஜராகவில்லை.