முழுநேர அரசியலில் பிஸியாக இருந்தாலும், நடிகர் மற்றும் இயக்குனரான சீமான் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் அடுத்ததாக 'தர்மயுத்தம்' என்ற திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். 'தீர விசாரிப்பதே மெய்' என்ற ஹேஷ்டேக் உடன் இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சீமானுடன் அனு சித்தாரா மற்றும் ஆர்கே சுரேஷ் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.