தாம்பரம் அரசு பெண்கள் விடுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிக்கையில், "6 ஏக்கர் பரப்பு கொண்ட அரசு விடுதியில் நுழைவு வாயில் உட்பட 2 இடங்களில் மட்டுமே CCTV கேமிரா வேலை செய்கிறது. 12 மணிநேரத்துக்கும் மேலாக ஒரேயொரு ஆண் காவலாளி வேலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். சம்பவ நாளில் பெண் கண்காணிப்பாளர் விடுப்பில் சென்றபோது, வேறு பெண் காப்பாளர் தற்காலிகமாக நியமிக்கப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.