மகாராட்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள மெல்காட்டில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் அதிகமாக இல்லாவிட்டாலும், நில அதிர்வு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்படவில்லை. சில குடியிருப்புகளில் லேசான விரிசல் விழுந்துள்ளது. மெல்காட்டில் 6 மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.