திருவண்ணாமலை: ஆரணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வீட்டில் 15 மணி நேர சோதனை நிறைவடைந்தது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில் இந்த சோதனையானது நடைபெற்றதாக தெரிகிறது. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சேவூர் ராமச்சந்திரன் கூறுகையில், “எடப்பாடி துணையிலும் சட்டத்தின் துணையோடும் இந்த வழக்கை எதிர்கொள்வேன். பொய்யான வழக்கிலிருந்து மீண்டு வருவேன்” என்றார்.