பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. தில் ராஜுவின் வீடு, அலுவலகத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், தமிழில் விஜய் நடித்த 'வாரிசு' படத்தை தயாரித்துள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர், பிரபாஸ், மகேஷ்பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார்.