ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலை அடுத்து, இஸ்ரேலில் பயங்கரமான சூழல் நிலவுகிறது. பயங்கரவாதிகள் அந்த நாட்டு ராணுவ வீரர்களையும் மக்களையும் பிணைக் கைதிகளாக பிடித்து சித்ரவதை செய்கின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தீவிரவாதிகள் ஒரு குடும்பத்தை பிணைக் கைதியாக பிடித்து அவர்களது 18 வயது மகளை கொடூரமாக கொன்றனர். அவர்களது குழந்தை அடுத்த அறையில் இறந்து கிடக்கும் போது, குடும்பத்தில் உள்ளவர்கள் வேறொரு அறையில் கடத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.