மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த கேரள விஞ்ஞானி டாக்டர் ராக்ஸி மேத்யூ தலைமையிலான குழு, 2 மாதங்களுக்கு முன்பே டெங்கு பாதிப்புகளைக் கணிக்கும் திறன் கொண்ட ஒரு புதுமையான மாதிரியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் ஆகியவற்றைப் பயன்படுத்தி வானிலை மாற்றம், டெங்கு காய்ச்சலுக்கு இடையே உள்ள தொடர்பை கண்டறிகிறது. மழைப்பொழிவை பொறுத்து கொசு இனப்பெருக்கம், டெங்கு பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை முன் கூட்டியே அறிவிக்கிறது.