ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு ஜூலை 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கை ஒட்டி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சோளிங்கர் யோக நரசிம்ம பெருமாள் கோயில் (திருக்கடிகை), 64-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோக நிலையில் உள்ளது தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.