தமிழ்நாட்டில் 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று (ஜன. 02) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மூன்றாம் பருவத்திற்கான வகுப்புகள் ஆரம்பமாகின்றன. விடுமுறை முடிந்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்புவதால் வகுப்பறைகளை தயார் நிலையில் வைத்திருப்பதற்கும், மாணவர்களுக்கு தாமதமில்லாமல் பாடநூல்களை வினியோகிக்கவும் கல்வித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.