புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு

76பார்த்தது
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு
புதுச்சேரி மாநிலம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்பட்டன. அம்மாநிலத்தில் உள்ள காரைக்கால், மாகி, ஏனாமில் அரசு & தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன. அரசின் அறிவிப்புப்படி இன்று வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களை உற்சாகமாக வரவேற்க அலங்கார வளைவுகளும் பள்ளி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் நண்பர்களை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேரில் பார்த்த மகிழ்ச்சியில் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி