ராஜஸ்தானின் பாரத்பூரில் உள்ள தீக் கிராமத்தில் உள்ள காவல் நிலையம் முன்பு நேற்று (டிச.23) மாலை 4.30 மணியளவில் பரீட்சை முடித்து திரும்பிய 14 வயது பள்ளி மாணவியை பொலிரோ காரில் மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். அப்போது அங்கிருந்த மற்ற மாணவிகள் கடத்தலை தடுக்க முயன்றபோது மர்ம நபர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு சிறுமியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து போலீசார் ஆறு பேர் மீது கடத்தல் மற்றும் துப்பாக்கிச் சூடு வழக்கு பதிவு செய்துள்ளனர்.