மகாராஷ்டிரா: நவி மும்பையில் 15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த மார்ச். 03 அன்று நடந்துள்ளது. மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்ற ஓட்டுநர் அவரை சீரழித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் கூற, அவர்கள் போலீஸ் புகாரளித்தனர். விரிவான விசாரணைக்கு பின்னர் ஓட்டுநர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.