வியன்னா: ஆஸ்திரியாவில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள், ஆசிரியர் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (ஜூன் 10) காலை மர்ம நபர் ஒருவர் பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன்பின் அவர், பள்ளி கழிப்பறைக்கு சென்று தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.