புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே ஆத்தங்கரைவிடுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கொட்டகை போடுவதற்காக வீட்டின் முன்பு பள்ளம் தோண்டியுள்ளார். இதில் மழைநீர் தேங்கி இருந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் அஸ்வின் (12), பழனிவேல் மகன் புவனேஸ்வரன் (9) இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது பள்ளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.