பள்ளிக்கல்வியின் 2025 - 26 கல்வியாண்டின் நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 முதல் 26 வரை காலாண்டு தேர்வு, செப். 29 முதல் அக் .5 வரை காலாண்டு விடுமுறை. டிசம்பர் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு. டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை அரையாண்டு விடுமுறை. ஜனவரி 14 முதல் 18 வரை பொங்கல் விடுமுறை. ஜனவரி 10 முதல் 26 வரை முழு ஆண்டு தேர்வு என கூறப்பட்டுள்ளது. விளையாட்டுக்கு வாரம் இரண்டு வகுப்புகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.