சாலை விபத்தில் சிக்கிய நபருக்கு 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்படும் அவசர மருத்துவ சிகிச்சைக்கான செலவை அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அரசே ஏற்றுக்கொள்ளும் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "உலக அளவில் புகழ்பெற்ற திட்டமாக இத்திட்டம் விளங்கி வருகிறது. சாலை விபத்தில் சிக்கிய 4 லட்சம் பேர் இதுவரை பயனடைந்துள்ளனர்" என்றார்.