தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் காப்பீடு தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளாகி முதல் 48 மணி நேரத்தில் ஒருவரிடத்தில் பணம் இருக்கிறதோ இல்லையோ மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்து அரசின் சார்பில் ரூ.2 லட்சம் வரை அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். மேலும், விபத்து நேர்ந்து முதல் 48 மணி நேரத்தில் அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.