விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாயில் பட்டியில், பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் 8 அறைகள் தரைமட்டமாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.