விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழதாயில்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இங்கு ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக கணேசன், மேலாளர் மற்றும் 2 போர்மேன்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் மூவரை போலீசார் தேடுகின்றனர்.