சவுக்கு சங்கர் கைதுக்கு சசிகலா கண்டனம்

85பார்த்தது
சவுக்கு சங்கர் கைதுக்கு சசிகலா கண்டனம்
சவுக்கு மீடியா முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர் கைதுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான அரசு இதுபோன்று பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தி, பத்திரிக்கை சுதந்திரத்தை அடியோடு நசுக்கிவிடலாம் என்று தப்பு கணக்கு போடுவதை விட்டுவிட்டு, தங்கள் தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பெண் காவலர்களை ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு ஒரு பெண்ணான சசிகலா ஆதரவு தெரிவித்துள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி