தூய்மை பணியாளர் தூக்கிட்டு தற்கொலை

545பார்த்தது
தூய்மை பணியாளர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மலைக்கோட்டை கோவில் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி அன்பில் வடக்கு தெரு, மங்கம்மாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெகன்(வயது 28). திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். 7 வருடமாக தற்காலிகமாக பணியாற்றிய அவர் 1 வருடத்திற்கு முன்பு பணி நிரந்தரம் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.