பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஜூன் 8) மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "எங்களை சங்கிகள் என்று அழைத்தால் கவலைப்படப் போவதில்லை. ஊழல்வாதிகள், குற்றவாளிகள் என்று கூறுவதை விட சங்கிகள் என்பது மேன்மையான வார்த்தைதான். வரும் தேர்தலில் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, தாமரை மலர்ந்தே தீரும்" என்று பெருமிதத்துடன் கூறினார்.