ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சாம்சங் நிறுவனம் திட்டம்

58பார்த்தது
ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சாம்சங் நிறுவனம் திட்டம்
ஆசியாவில் உள்ள தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், 10ல் ஒரு ஊழியர் வேலை இழக்கக் கூடிய சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்து சாம்சங் நிறுவனம், "செயல்திறனை மேம்படுத்தவும், ஊழியர்கள் படிநிலையை சீர் செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தனை ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்ற டார்க்கெட் எல்லாம் இல்லை" என விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி