அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள்.. விவசாயிகள் மகிழ்ச்சி

75பார்த்தது
அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள்.. விவசாயிகள் மகிழ்ச்சி
திருச்சி: முசிறியில் இருந்து தொட்டியம் செல்லும் சாலை ஓரத்தில் வயல்வெளியில் விளைந்து பொன்னிறமாய் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள் காண்போரை கவரும் விதமாக உள்ளது. ஒருபுறம் காவேரி ஆறு அதன் அருகே பக்கவாட்டில் உள்ள பாசன வாய்க்காலில் தண்ணீர் நிறைந்து செல்லும் காட்சி ரம்மியமாக உள்ளது. அதன் அருகே வயலில் சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்கள் விளைச்சலாக அறுவடைக்கு தயாராக உள்ளது. ஓரிரு வாரங்களில் அறுவடை செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி