அமெரிக்காவில் நடைபெற்ற TANA (Telugu Association of North America) 2025 நிகழ்ச்சியில் நடிகை சமந்தா உணர்ச்சிவசப்பட்டு மேடையில் கண்கலங்கி பேசியுள்ளார். இங்கு வர தனக்கு 15 ஆண்டுகள் ஆனதாக குறிப்பிட்டு பேசிய சமந்தா, தான் எப்போதும் தெலுங்கு ரசிகர்களைப் பற்றியே சிந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது ரசிகர்கள் எவ்வளவு தொலைவில் (அமெரிக்காவில்) இருந்தாலும், எப்போதும் தன் மனதில் இருப்பீர்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.