ஏற்காடு - Yercaud

ஏற்காட்டில் மீண்டும் மஞ்சப்பை வினியோகம்

ஏற்காட்டில் மீண்டும் மஞ்சப்பை வினியோகம்

மஞ்சப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ஏற்காட்டில் மீண்டும் மஞ்சப்பை வினியோகம் செய்யுமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் மஞ்சப்பை வினியோகம் செய்யப்பட்டது. மாவட்ட சுற்றுலா அலுவலர் வினோத்குமார், தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் தினேஷ் மற்றும் ஊழியர்கள் 5 ஆயிரம் மஞ்சப்பை வினியோகத்தை தொடங்கினர். முதல் கட்டமாக படகு இல்லத்தை சுற்றியுள்ள கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்டவற்றுக்கு மஞ்சப்பையை வழங்கினர். மேலும் படகு இல்லம், தமிழ்நாடு ஓட்டலில் தங்கும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சப்பை கொடுப்பதுடன், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் மஞ்சப்பை பயன்படுத்துங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా