ஏற்காடு - Yercaud

சேலம் மத்திய சிறையில் டி. ஜி. பி கைதிகளிடம் குறை கேட்டார்

சேலம் மத்திய சிறையில் டி. ஜி. பி கைதிகளிடம் குறை கேட்டார்

சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 850-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சேலம் மத்திய சிறைக்கு நேற்று சிறைத்துறை டி. ஜி. பி. மகேஸ்வர் தயாள் வந்தார். பின்னர் அவர் சிறையில் கைதிகளை பார்வையிடுவதற்காக உறவினர்கள் செல்போன் மூலம் பேசி முன் அனுமதி பெறக்கூடிய இடம், சிறையில் செயல்பட்டு வரும் தொழிற்கூடங்கள், கைதிகள் அறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சிறைத்துறை ஐ. ஜி. கனகராஜ், கோவை சரக டி. ஐ. ஜி. சண்முகசுந்தரம், மத்திய சிறை சூப்பிரண்டு வினோத் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் ஜெயிலில் சிறை பண்பலையை டி. ஜி. பி. தொடங்கி வைத்தார். இந்த பண்பலையில் தன்னம்பிக்கை, மறுவாழ்வு நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா பாடல்கள் இடம்பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా