சேலம் அருகே மினி லாரி மோதி வாலிபர் பலி

53பார்த்தது
சேலம் அருகே மினி லாரி மோதி வாலிபர் பலி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரன் (வயது 29). இவர் சொந்த வேலை காரணமாக சேலம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பவித்ரன் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி