ஏற்காடு கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தீா்த்தக்குட ஊர்வலம்

75பார்த்தது
ஏற்காடு கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தீா்த்தக்குட ஊர்வலம்
சேலம் மாவட்டம் ஏற்காடு முருகன் நகர் பகுதியில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 44 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் முடிந்து இன்று (வெள்ளிக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக புதிதாக தேவி கருமாரியம்மன், பிரம்மா, நர்த்தன விநாயகர், ஆஞ்சநேயர், தன்வந்தரி, தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், காலபைரவர், சூரியன், நவக்கிரகங்கள், 18 சித்தர்கள், தியான லிங்கம் ஆகியவற்றை பிரதிஷ்டை செய்ய உள்ளனர். 

இதன் முதல் நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு ஏற்காடு சின்ன ஏரியில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம், சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலுக்கு வந்தனர். ஊர்வலத்தில் முருகன் நகர் மற்றும் அருகில் உள்ள கிராமத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி