ஏற்காட்டில் மான்போர்ட் பள்ளியின் 109வது ஆண்டு விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஏற்காடு மண்டல மான் போர்ட் சபை தலைவர் டோமினிக் சாவியோ கலந்து கொண்டார். முன்னாள் மாணவரும், தொழிலதிபருமான அசோக்குமார், பள்ளி முதல்வர் ஆரோக்கிய சகாயராஜ் ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். பின்னர் நடந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு தொழிலதிபர் அசோக்குமார் பரிசுகள் வழங்கினார்.