ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

65பார்த்தது
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி சேலம் ஏற்காட்டில் நேற்று (ஜனவரி 16) ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், அண்ணா பூங்கா, சேர்வராயன் மலைக்கோவில், ஜென்ஸ் சீட் போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தும் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சிறுவர் சிறுமிகள் அண்ணா பூங்காவில் உள்ள ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் விளையாடி மகிழ்ந்தனர். 

மேலும் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவச உடை அணிந்து உற்சாகமாக குடும்பத்தினருடன் படகு சவாரி செய்தனர். ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஏற்காட்டில் உள்ள உணவகங்கள் மற்றும் சாலையோர கடைகளில் விற்பனை படுஜோராக இருந்தது. படகு இல்லத்தில் மதியத்திற்கு மேல் சுற்றுலா பயணி வருகை அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.

தொடர்புடைய செய்தி