சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, 1, 095 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அடங்கிய கல்வராயன்மலை, கடல் மட்டத்தில் இருந்து, 4, 000 அடி உயரத்தை கொண்டுள்ளது. இவை, பெரிய கல்வராயன், சின்ன கல்வராயன்மலை என, மலை பகுதியில் உள்ள 200 கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
இந்த கல்வராயன்மலையில் பத்துக்கும் மேற்பட்ட நீர் வீழ்ச்சிகள் காணப்படுகிறது. இதில், ஆத்துார் அருகே, கீழ்நாடு ஊராட்சி, நாகலுார், கற்பக்காடு வனப்பகுதியில் உள்ள நாகலுார் நீர் வீழ்ச்சி, 500 அடி உயரத்துக்கு மேல் உள்ளது.
நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும் ரம்மியமான அழகு காட்சிகளை, கழுகு பார்வையில் மேலும் அழகாய் காட்சியளிக்கிறது. ஆபத்தான வளைவுகள் கொண்ட நீர் வீழ்ச்சியில் இளைஞர்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.