சேலம் மாவட்டம் ஏற்காடு வாடகை வாகன டிரைவர்கள் ஒன்றிணைந்து ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காடு போலீஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனி மைக்கேலிடம் கொடுத்தனர்.
அந்த மனுவில், ஏற்காடு பகுதிக்கு சுற்றுலா பயணிகளை சேலத்தில் இருந்து ஏற்றி வரும் தனியார் நிறுவன வாடகை கார்கள் ஏற்காட்டிலேயே டிராப் செய்வது இல்லாமல் ஏற்காட்டில் காத்திருந்து உள்ளூர் வாடகை மற்றும் சுற்றுலா பகுதிக்கு தாங்கள் பேசும் வாடகையை எடுத்து செல்வதால் ஏற்காடு வாடகை வாகன டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
எனவே நீலகிரி மாவட்டத்தில் நடவடிக்கை எடுத்தது போல் தனியார் நிறுவன கார்களை ஏற்காட்டில் டிராப் மட்டும் செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.