சேலம் பாஜக பட்டியலின மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி தலைமையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பைத்தூர் மல்லிகை கடை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு திடீரென வந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவின் ஈடுபடக்கூடாது எனக் கூறி பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்படாத மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை எடுத்து நான்கு பேரை மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியை சந்திக்க அனுமதி அளித்தனர்.
இது குறித்து பூபதி கூறுகையில் மல்லிகை கரை அருகே சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பெரியாண்டிச்சி அம்மன் கோவில் எங்கள் சமூக மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். இந்த நிலையில் வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டு எங்கள் சமூகத்தை கோவிலுக்கு வர விடாமலும் வழிபாடு செய்ய விடாமலும் தடுத்து வருகின்றனர். மேலும் வருகின்ற 16ஆம் தேதி கும்பாபிஷேக விழா முன்னறிவிப்பு இல்லாமல் ஏற்பாடு செய்துள்ளனர். கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது எங்களை அனுமதித்த பிறகு கும்பாபிஷேகம் குறிப்பிட்ட 16ஆம் தேதி நடத்த வேண்டும் என தெரிவித்தனர். இவ்வாறு தெரிவித்தார்.