சேலம் சிறைப் பணியாளர்கள் குழந்தைகள் காப்பகம் திறப்பு

682பார்த்தது
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சிறை பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் காப்பகம் பயிற்சிக் கல்வி நிலையம் உள்ளிட்டவைகளை சிறை கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார் சேலம் மத்திய சிறையில் 300க்கும் மேற்பட்ட சிறைப் பணியாளர்கள் உள்ளனர் இவர்களின் வசதிக்காகவும் அவர்களுடைய குடும்பத்தின் உறுப்பினர்கள் மேம்பாட்டிற்காகவும் சிறை துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறைப் பணியாளர்களுக்கு மற்றும் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் பயன் பெறும் வகையில் நூலகம் துவங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து உடற்பயிற்சி மையம் துவங்கப்பட்டது இந்த நிலையில் சிறை குடியிருப்பு வளாகத்தில் புதியதாக சிறைப் பணியாளர் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி நிலையம் சிறைப்பணியாளர் குழந்தைகளுக்கான பகல் காப்பகம் சிறை பணியாளர் குடியிருப்பு மருத்துவமனை மற்றும் அரசு போட்டி தேர்வு மையம் ஆகியவை சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது சிறைத்துறை கண்காணிப்பாளர் (பொருப்பு) வினோத் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றியும் ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து குழந்தைகள் பகல் காப்பகம் மற்றும் சிறப்பு கல்வி நிலையங்களை பார்வையிட்டார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி