சேலம்: பெட்ரோல் கேனுடன் மக்களை மிரட்டிய பிரபல ரவுடி கைது

592பார்த்தது
சேலம்: பெட்ரோல் கேனுடன் மக்களை மிரட்டிய பிரபல ரவுடி கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எம். பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 38), கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை மேட்டுப்பட்டி பஸ் நிலையம் பகுதியில் பெட்ரோல் கேனுடன் சுற்றித்திரிந்ததோடு அந்த பகுதி வழியாக சென்ற வாகனங்களை வழி மறித்து வாகனங்களை கொளுத்தி விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. 

இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த அசோக்குமாரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அசோக்குமார் மீது சேலம் மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அடிதடி, கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடி என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி