சேலம் மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி, அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1, 23, 184 கன அடியில் இருந்து 1, 34, 115 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் 103. 130 அடியில் இருந்து 107. 690 அடியாக அதிகரித்துள்ளது. இதனால் நீர் இருப்பு 75, 167 டி. எம். சி. யாக உள்ளது. மேலும், குடிநீர் தேவைக்கு 1, 000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.