சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரில் சின்ன கிருஷ்ணாபுரத்தில் நேற்று(நவ.29) நடராஜன் புது மாரியம்மன் கோவில் தெருவில் மனைவி திவ்யா உடன் வீடு வாடகைக்கு எடுத்து இரண்டு மாதங்களாக குடியிருந்து வருகிறார்.
சின்ன கிருஷ்ணாபுரம் ஏரியாவில் உள்ள கிணற்றுகளில் இருந்த மின் மோட்டார் கேபிள் ஒயரை திருடி எடுத்து வந்து அவரது வீட்டில் வைத்து ஒயரில் உள்ள அலுமினிய கம்பியை எடுத்துவிட்டு வெறும் கேபிள் ஒயரை குப்பையில் வந்து போடும்போது ஊர் மக்கள் பிடித்து தாக்கியதை அடுத்து ஒயர் திருடியதாக ஒப்புக்கொண்டார். தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திரட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.