மக்கள் நீதிமன்றம் மூலம் 3, 616 வழக்குகளுக்கு உடனடி தீர்வு

55பார்த்தது
மக்கள் நீதிமன்றம் மூலம் 3, 616 வழக்குகளுக்கு உடனடி தீர்வு
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்கு, குடும்பம் மற்றும் சொத்து பிரச்சினை, காசோலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி கலந்து கொண்டு மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 541 வழக்குகள் சமரசத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது. முடிவில், 3, 616 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ. 30 கோடியே 18 லட்சத்து 56 ஆயிரத்து 570-க்கு சமரச தீர்வு காணப்பட்டது.

சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 47). லாரி டிரைவரான இவர், 2022-ம் ஆண்டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பாபு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் தங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொண்டு சமரசம் செய்து விபத்தில் இறந்த பாபுவின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு தொகை வழங்க முடிவு செய்து அதற்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.

தொடர்புடைய செய்தி